தமிழில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்தப் படத்தை அறிமுக இயக்குனரான சிபி சக்கரவர்த்தி இயக்கியிருந்தார், இவர் இயக்குனர் அட்லீயிடம் இணை இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
சிபி சக்கரவர்த்தி தனது முதல் படத்திலேயே 100 கோடி வசூல் கொடுத்து தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார். அவரது அடுத்த படத்திற்கு தற்போது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவர் ரஜினி, விஜய் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுக்கு கதை கூறியுள்ளதாகவும் கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் சிபி சக்கரவர்த்தி தெலுங்கு நடிகர் நானியிடம் புதிய படத்திற்காக கதை கூறியுள்ளதாகவும் அதில் நடிக்க நானி சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. ஹாய் நான்னா படத்தைத் தொடர்ந்து நானி தமிழில் சிபியுடன் இணைந்து இப்புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.