செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “காதல் கொண்டேன்”.

தனுஷ் இப்படத்தின் கதாநாயகன் ஆவார். சோனியா அகர்வால் இப்படத்தின் கதாநாயகி ஆவார். இதை இயக்கியவர் செல்வராகவன். தனுஷிற்கு இத்திரைப்படம் ஒரு திருப்பு முனையாக இருந்தது. நன்கு நடிக்க கூடியவர் என்ற பெயரைப் பெற்று தந்தது.
இந்த படத்தில், நா முத்துக்குமார் வரிகளில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது. குறிப்பாக “தேவதையை கண்டேன்” பாடல் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.
So so cute 😍😍😍 https://t.co/rXhV2Agz1x
— selvaraghavan (@selvaraghavan) January 10, 2023
இந்த நிலையில் அந்தப் பாடலின் மறு ஆக்கமாக குழந்தைகள் நடித்துள்ள வீடியோவை, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “So So Cute”என இயக்குனர் செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.