spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஞானவேல் ராஜா பேச்சுக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம்

ஞானவேல் ராஜா பேச்சுக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம்

-

- Advertisement -

இயக்குநர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதற்கு, இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் பருத்திவீரன். படம் வெளியான நாள் முதலே படத்தின் இயக்குனரான அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையில் சலசலப்பு ஏற்பட்டது. முன்னதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீர் பொய் கணக்குகள் காட்டி பணத்தை மோசடி செய்து விட்டார் எனவும் அவருக்கு படம் எடுக்க தெரியாது என்றும் தொடர்ந்து பேசி வந்தார். ஆரம்பத்தில் இருந்தே இதனை அமீரும் மறுத்து அவ்வப்போது பதில் அளித்து வந்தார்.

we-r-hiring

 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் அமீரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து அவமானப்படுத்தும் விதமாக பேசியுள்ளார். இதனால் இயக்குனர் அமீர் மிகவும் மனமடைந்து உண்மை தெரிந்தவர்களும் அமைதியாக உள்ளீர்களே என்று தன் வேதனையை வெளிப்படுத்தினார். இதனால் படத்தில் பணிபுரிந்த உண்மை அறிந்த பிரபலங்கள் அமீர் மீது எந்த தவறும் இல்லை என்றும் ஞானவேல் ராஜா தான் தேவை இன்றி பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறார் என்றும் அமீருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். பிரபலங்களான சமுத்திரக்கனி, சசிகுமார் போன்றோரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இயக்குநரும், நடிகருமான கரு. பழனியப்பன் அமீருக்கு ஆதராக அறிக்கை வெளியிட்டார். பொதுவெளியில் அமீரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான பாரதிராஜாவும் ஞானவேல் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகப்பெரிய படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. திரைத்துறையில் தங்களை அறிமுகப்படுத்தி மிகப்பெரிய தயாரிப்பாளராக உருவாக்கியதில் அமீருக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. அவரை எக்காளமாக கூறி வன்மையாக சிரிப்பது, அனைத்து படைப்பாளிகளையும் அவமதிக்கக் கூடிய செயலாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக வருத்தம் தெரிவித்து பிரச்சனையை முடித்து வைத்து பார்ப்பதே நல்லது என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

MUST READ