spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபணிப்பெண்ணின் பாலோவர்ஸ் அதிகரிக்க உதவிய அல்லு அர்ஜூன்

பணிப்பெண்ணின் பாலோவர்ஸ் அதிகரிக்க உதவிய அல்லு அர்ஜூன்

-

- Advertisement -
இயக்குனர் சுகுமாரன் இயக்கத்தில் கடந்த வருடம் டிசம்பர் 13ஆம் தேதி வெளிவந்த புஷ்பா படத்தின் முதல் பாகமான ‘புஷ்பா தி ரைஸ்’ தென்னிந்தியா மட்டும் இல்லாமல் பான் இந்தியா அளவில் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த இத்திரைப்படம் பான் இந்தியா அளவில் வெளியாகி ரூபாய் 500 கோடி வரை வசூலித்து சாதனை செய்தது. தற்போது அல்லு அர்ஜூன் நடிப்பில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா தி ரூல்‘ உருவாகி வருகிறது. இப்படத்திலும் ராஷ்மிகா நாயகியாக நடிக்கிறார்.

 

இதைத் தொடர்ந்து, இந்தியாவின் பவர்ஹவுஸ் தயாரிப்பாளர் பூஷன் குமார், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் இந்திய சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஆகியோர் ஒரு மிகப்பெரிய படத்திற்காக ஒன்றிணைந்துள்ளனர். டி-சீரிஸ் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில், தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணிற்கு ஆதரவு அளிக்கும் விதமாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, அந்த பெண்ணிக்கு சமூக வலைதளத்தில் 13 ஆயிரம் பாலோவர்கள் உள்ளதாகவும், அதனை 30 ஆயிரமாக அதிகரிக்கும் வகையில் இந்த வீடியோவை எடுப்பதாகவும் தெரிவித்தார். இதனால், அல்லு அர்ஜூன் சம்மதம் தெரிவித்து அப்பெண்ணுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை எடுத்துத் தந்துள்ளார்.

MUST READ