 தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஹரி. இவர் ஐயா, ஆறு, வேல், சிங்கம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். தற்போது தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை தொடர்ந்து விஷால் நடிப்பில் விஷால் 34 படத்தை இயக்கியுள்ளார்.  இந்த படத்திற்கு

“ரத்னம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு அனிமேஷன் வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ வெறித்தனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இது மெடிக்கல் மாஃபியாவால் பாதிக்கப்பட்ட ஹீரோவுக்கும் வில்லனுக்கும் நடக்கும் கதை என்றும் தெரிய வந்துள்ளது. தற்போது ரத்னம் படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால் ஒரு கையில் அரிவாள் மற்றும் இன்னொரு கையில் வெட்டப்பட்ட தலையை வைத்து கொடூரமாக காணப்படுகிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ரத்னம் திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைதுள்ளார். இந்தப் படத்தில் விஷாலுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்பதும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு கோடையில் வெளியாக இருக்கிறது என்றும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.