spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் சம்பவம் செய்ய வருகிறது 'ரேனிகுண்டா 2' ....உறுதிப்படுத்திய இயக்குனர்!

மீண்டும் சம்பவம் செய்ய வருகிறது ‘ரேனிகுண்டா 2’ ….உறுதிப்படுத்திய இயக்குனர்!

-

- Advertisement -

மீண்டும் சம்பவம் செய்ய வருகிறது 'ரேனிகுண்டா 2' ....உறுதிப்படுத்திய இயக்குனர்!நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு பட்ஜெட் ஒரு தடையே இல்லை. சிறிய பட்ஜெட் படங்கள் கூட பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைக்கின்றன. 2009இல் அந்த மாதிரியான ஒரு படமாக வெளிவந்த திரைப்படம்தான் ரேனிகுண்டா. யாருக்கும் பரிட்சையம் இல்லாத புது முக இளம் நடிகர்களை வைத்துக்கொண்டு ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார் இயக்குனர் ஆர். பன்னீர்செல்வம். இப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஆர். பன்னீர்செல்வம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த கருப்பன் என்ற வெற்றி படத்தை கொடுத்தார்.மீண்டும் சம்பவம் செய்ய வருகிறது 'ரேனிகுண்டா 2' ....உறுதிப்படுத்திய இயக்குனர்!
இளம் வயது குற்றவாளிகளாக மாறிய இளைஞர்களையும் அவர்களை சுற்றி நடக்கும் கதைகளையும் எதார்த்தமாக ரேனி குண்டா படத்தில் படமாக்கி இருந்தனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேனிகுண்டா பகுதியில் நடக்கும் கதை என்பதால் அப்பெயரையே படத்தின் தலைப்பாக வைத்திருந்தனர். தமிழில் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர் சூப்பர் ஹிட்டானது. பிரபல நகைச்சுவை நடிகர் சிங்கம் புலி தான் படத்திற்கு கதை எழுதியிருந்தார். இந்நிலையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.

இச்செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக படத்தின் இயக்குனரான ஆர் பன்னீர்செல்வம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ” ரேனிகுண்டா 2… ஆரம்ப கட்ட வேலைகள் ஆயத்தம், அடுத்த கட்ட நகர்வுகள் விரைவில்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரேனிகுண்டா படத்தின் போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். ரேனிகுண்டா 2 படத்தில் ,முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்கள் நடிப்பார்களா அல்லது புதியவர்களா, கதைக்களம் அதே தானா அல்லது மாறுபட்டதா, இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியா அல்லது முற்றிலும் வேறு ஒரு கதையா என்பது போன்ற கேள்விகளுக்கு விடையாக அடுத்தடுத்த அப்டேட்டுகளும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ