spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமழையால் தியேட்டர் வசூல் பாதிப்பு... திரையரங்க உரிமையாளர்கள் கலக்கம்...

மழையால் தியேட்டர் வசூல் பாதிப்பு… திரையரங்க உரிமையாளர்கள் கலக்கம்…

-

- Advertisement -

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கியதால் திரையரங்குகளில் வசூல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த டிசம்பர் 1-ம் தேதி அன்று 4 முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வௌியாகின. நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படம் கடந்த 1-ம் தேதி வெளியானது. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். படத்தில் ஜெய், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சமையல், பெண்ணியம் ஆகியவற்றை மையப்படுத்தி அன்னபூரணி திரைப்படம் உருவாகியுள்ளது.

we-r-hiring
இதேபோல டிசம்பர் 1-ம் தேதி வெளியான திரைப்படம் அனிமல். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேபோல, ஹரிஸ் கல்யாணின் பார்க்கிங் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. இது தவிர, பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸின் வா வரலாம் வா, சூரகன், நாடு ஆகிய திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகின.

இந்நிலையில், சென்னையில் பெய்த கனமழை காரணமாக கடந்த 3 நாட்களாக தியேட்டர்களில் ரசிகர்கள் வரவு பாதித்தது. பெரும்பாலான காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், படத்திற்கு நேர்மறை விமர்சனங்கள் இருந்தும் வசூல் இல்லாமல் இழப்பை சந்தித்தன. இதனால், திரையரங்க உரிமையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

MUST READ