spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கண்ணகி' படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்... மகிழ்ச்சியில் படக்குழுவினர்!

‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!

-

- Advertisement -

'கண்ணகி' படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்... மகிழ்ச்சியில் படக்குழுவினர்!கலை, நேத்ரா, நதி, கீதா என நான்கு பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து “கண்ணகி” படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், அம்மு அபிராமி, ஷாலின் ஷோயன் போன்றோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் இயக்குனரான யஸ்வந்த் கிஷோர், ஆதேஷ் சுதாகர், வெற்றி, மயில்சாமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நான்கு பெண்கள் அவர்களுடைய காதல் மற்றும் அதற்குப் பிறகான திருமண வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் தான் கண்ணகி.'கண்ணகி' படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்... மகிழ்ச்சியில் படக்குழுவினர்! சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. இந்நிலையில் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளதாகவும் படத்தில் நடித்துள்ள ஆதிஷ் சுதாகர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஆதிஷ் கூறியிருப்பதாவது ” சிறுவயதிலிருந்தே நான் பார்த்த வியந்த சூப்பர் ஸ்டார் எங்களது படத்தை பாராட்டியது மிக மகிழ்ச்சியான தருணம். இந்த வெற்றி தருணத்தை பகிர்ந்து கொள்ள என்னுடைய தந்தை என்னுடன் இல்லை. ஆனால் அவருடைய நினைவுகள் என்னிடம் இருக்கின்றன. எனக்கு ஊக்கமாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களே என்னை பாராட்டியது புது உத்வேகத்தை அளித்துள்ளது. மேலும் டிசம்பர் 15 அன்று கண்ணகி திரைப்படத்தை மக்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன். இந்த பயணத்தை மறக்க முடியாததாக மாற்றுவோம். அன்பும் நன்றியும்” என்று தெரிவித்துள்ளார்.'கண்ணகி' படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்... மகிழ்ச்சியில் படக்குழுவினர்!

ஏற்கனவே படத்தின் டிரைலர் தரமாக இருந்ததோடு தற்போது சூப்பர் ஸ்டார், படத்திற்கு கொடுத்துள்ள பாராட்டும் நிச்சயமாக “கண்ணகி” ஒரு தரமான படமாக இருக்கும் என்ற நம்பிக்கையை தந்துள்ளது.

MUST READ