அமுக்கிரா கிழங்கு என்பது இயல்பிலேயே கசப்பு சுவை கொண்டது. இது நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மனச்சோர்வு ,வாதம் போன்றவைகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம் வாங்க.

இந்த அமுக்கிரா கிழங்கினை பொடியாக்கி நெய்யில் கலந்து பயன்படுத்தி வர நீண்ட ஆயுள் பெறலாம். அது மட்டும் இல்லாமல் உடல் உறுதியும் அழகும் கூடும்.
அமுக்கரா கிழங்கை சுக்குடன் சேர்த்து பயன்படுத்தலாம். அந்த வகையில் சிறிதளவு அமுக்கிரா கிழங்கு மற்றும் சிறிதளவு சுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை வெந்நீர் சேர்த்து அரைத்து வீக்கங்கள் உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் வீக்கம் குறையும்.
அமுக்கிரா கிழங்கை பச்சையாக எடுத்து, அதனுடன் பசும்பால் சேர்த்து அரைத்து கொதிக்க விட வேண்டும். பின் அதனை இடுப்பு வலி உள்ள இடங்களில் பற்று போன்று பயன்படுத்தி வரலாம்.
அமுக்கிரா கிழங்கை பசும்பாலில் வேகவைத்து, வடிகட்டி எடுத்து அதனை காய வைக்க வேண்டும். காய வைத்த கிழங்கை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை நீங்கும். மேலும் உடல் எடையும் குறையும். அமுக்கிரா கிழங்கு பொடியை ஒரு வேளைக்கு இரண்டிலிருந்து நான்கு கிராம் அளவில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இம்முறைகளை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லையேல் மருத்துவரை உடனடியாக அணுகவும்.