spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாக்ஸ் ஆபிஸை அடித்து தூக்கும் அனிமல்... ரூ.1000 கோடியை நெருங்கும் வசூல்...

பாக்ஸ் ஆபிஸை அடித்து தூக்கும் அனிமல்… ரூ.1000 கோடியை நெருங்கும் வசூல்…

-

- Advertisement -
ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்குகிறது.

தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய பெரும் வெற்றி பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. இதில் விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்திருந்தனர். இதையடுத்து, அர்ஜூன் ரெட்டி படத்தை இந்தியில் கபீர் சிங் என்று ரீமேக் செய்தார். இதில், கியாரா அத்வாணி, ஷாகித் கபூர் ஆகியோர் நடித்திருந்தனர்.

we-r-hiring
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் அனிமல். இத்திரைப்படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அப்பா மகன் பாசத்தை தழுவி எடுக்கப்பட்டிருந்த இத்திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் பல தரப்பட்ட விமர்சனங்களை பெற்றாலும், வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை 750 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து உள்ளது. அமெரிக்காவில் அனிமல் திரைப்படத்திற்கு வசூல் குவிந்து வருகிறது.

இந்நிலையில், அனிமல் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது. ரன்பீர் கபூர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் பெரிதளவில் வெற்றி பெறாத நிலையில், அனிமல் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்குவதால் பாலிவுட் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

MUST READ