Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை அதிரடி உயர்வு- இல்லத்தரசிகள் அதிர்ச்சி

தங்கம் விலை அதிரடி உயர்வு- இல்லத்தரசிகள் அதிர்ச்சி

-

- Advertisement -

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு அதிரடியாக ரூ.368 உயர்ந்து ரூ.42,386-க்கு விற்பனையாகிறது.

we-r-hiring

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் இருந்துவருகிறது. இந்நிலையில் மார்கழி மாதம் இன்றுடன் நிறைவடைந்து தை மாதம் நாளை பிறக்கவுள்ளது. இதுவரை சுப நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை என்ற போதிலும் நாளை முதல் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதால் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதற்கு கடந்த ஜூலை மாதம் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியதே காரணம் என தெரிவிகிறது. கடந்த மாதம் 21 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் 41 ஆயிரத்தை நெருங்கிய நிலையில், அதன்பின் குறைய தொடங்கியது. ஆனால் புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற தொடங்கிய தங்கம் ஒரு சவரன் 42 ஆயிரத்தை தொட்டது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ரூ.42,368- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.46 உயர்ந்து ரூ. 5,296-க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 அதிகரித்து ரூ.75-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி கிலோவுக்கு ரூ.1000 அதிகரித்து ரூ.75, 000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ