தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் 57 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு (SI), காவல் ஆய்வாளர்களாக (Inspector) பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக டிஜிபி வெளியிட்டுள்ள உத்தரவில், பதவி உயர்வு பெற்றுள்ள 57 காவல் ஆய்வாளர்களையும் அந்தந்த காவல் எல்லைக்குட்பட்ட காவல் ஆணையர்கள் (Commissioners), மண்டல ஐஜிக்கள் (IGs) மற்றும் பிரிவு அதிகாரிகள் (Unit Officers) உடனடியாக விடுவித்து, அவர்கள் நியமிக்கப்பட்டுள்ள புதிய பணியிடங்களில் தங்கு தடையின்றி பொறுப்பேற்க செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பதவி உயர்வு பெற்றுள்ள அதிகாரிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புதிய காவல் நிலையங்கள் அல்லது பிரிவுகளில் உரிய முறையில் பணி அமர்த்தப்படுவதை அந்தந்த உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். ஒரே நேரத்தில் 57 அதிகாரிகளுக்கு காவல் ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது காவல் துறையினர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

