Homeசெய்திகள்தமிழ்நாடுபோலி நம்பர் பிளேட்டுடன் வலம் வந்த தவெக பிரமுகர்: தொழிலதிபர் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்திய...

போலி நம்பர் பிளேட்டுடன் வலம் வந்த தவெக பிரமுகர்: தொழிலதிபர் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் கார் பறிமுதல்!

-

- Advertisement -

உறவினர் தகராறில் தொழிலதிபர் வீட்டிற்குள் புகுந்து கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், தமிழக வெற்றிக் கழக (தவெக) பிரமுகர் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு காரில் இருசக்கர வாகனத்தின் போலி எண் பொருத்தப்பட்டிருந்த அதிர்ச்சி தகவலும் தற்பொழுது அம்பலமாகியுள்ளது.போலி நம்பர் பிளேட்டுடன் வலம் வந்த தவெக பிரமுகர்: தொழிலதிபர் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் கார் பறிமுதல்!​பூவிருந்தவல்லி ராமானுஜ கூட தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் மாதவன், தொழிலதிபர். இவருக்கும் இவருடைய உறவினரும் தவெக பிரமுகருமான நாராயணன் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. ​இந்த நிலையில், கார்த்திக் மாதவன் சாலையில் சென்றுகொண்டிருந்த போது, அங்கு இனோவா காரில் வந்த நாராயணன் மற்றும் அவரது கூட்டாளிகள் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கார்த்திக் மாதவன் தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.

​வீடு புகுந்து தாக்குதல்
​கார்த்திக் மாதவன் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே, நாராயணன் தனது கூட்டாளிகளுடன் கார்த்திக் மாதவனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அங்கிருந்த கார்த்திக் மாதவன் மற்றும் அவரது தந்தையை அவதூறாகப் பேசிய கும்பல், கைகளாலும் கட்டையாலும் சரமாரியாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளது. ​இந்த கொடூர தாக்குதல் குறித்து கார்த்திக் மாதவன் பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், தவெக பிரமுகர் நாராயணன், விஜி, தியாகு, கோவிந்தன், கண்ணப்பன் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே வேளையில், நாராயணன் அளித்த மற்றொரு புகாரின் அடிப்படையில் கார்த்திக் மாதவன் உட்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

we-r-hiring

போலி நம்பர் பிளேட்டுடன் வலம் வந்த தவெக பிரமுகர்: தொழிலதிபர் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்திய விவகாரத்தில் கார் பறிமுதல்!

​டெல்லி காருக்கு தமிழக டூவீலர் நம்பர் – அம்பலமான மோசடி!
​வழக்கை விசாரித்த போலீசாருக்கு, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்துள்ளது. அந்தச் சொகுசு கார் டெல்லி மாநிலப் பதிவெண் கொண்டது (Delhi Registration) என்பது தெரியவந்துள்ளது. ​அந்த டெல்லி காரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இருசக்கர வாகனத்தின் (Two-Wheeler) போலி பதிவு எண்ணைப் பொருத்தி, நாராயணன் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

​இணையத்தில் வைரலாகும் ‘பந்தா’ ரீல்ஸ்
​தவெக பிரமுகரான நாராயணன், இந்த போலி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட சொகுசு காரில் பந்தாவாக வலம் வரும் காட்சிகளை யூடியூப் (YouTube) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ ஆகப் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அவர் வீடு புகுந்து தாக்கிய வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து, அவர் பந்தா காட்டிய கார் ஒரு போலி வாகன எண் கொண்டது என்ற விபரம் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

​தீவிர விசாரணை
​தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்தச் சொகுசு காரை பூவிருந்தவல்லி காவல்துறையினர் தற்பொழுது பறிமுதல் செய்துள்ளனர். காரின் பதிவு எண் மட்டும்தான் போலியாகப் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது அந்த காரே எங்கிருந்தாவது திருடப்பட்ட வாகனமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 5 பேர் உயிரிழப்பு, 42 பேர் படுகாயம்!

MUST READ