spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு!

வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு!

-

- Advertisement -

 

வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு!
Video Crop Image

தென் மாவட்டங்களை மிரட்டி வரும் பெரும் மழையால், நான்கு மாவட்டங்கள் தத்தளித்து வரும் சூழலில், மதுரை வைகை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

நெல்லையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கம்!

மதுரை மற்றும் வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் வைகை ஆற்றில் அதிகளவு தண்ணீர் ஓடுகிறது. மதுரையில் யானைக்கல் தரைப்பாலம், மதுரை, வடகரை சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியைத் தாண்டியதால், ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 15,000 கனஅடியாக இருப்பதால் வைகை ஆற்றோரங்களில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடிக்கு இன்று பொதுவிடுமுறை!

இதனிடையே, மேலூர் ஒருபோக பாசன கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதிக கனமழை பெய்து, நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக, தண்ணீர் திறக்கப்பட்டதாக நீர்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இருபோக பாசனத்திற்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் ஒருபோக பாசனத்திற்கும் தண்ணீரைத் திறக்க வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ