spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வேரிலிருந்து பழம் வரை மருத்துவ குணங்கள் கொண்ட இலுப்பை மரம்!

வேரிலிருந்து பழம் வரை மருத்துவ குணங்கள் கொண்ட இலுப்பை மரம்!

-

- Advertisement -

வேரிலிருந்து பழம் வரை மருத்துவ குணங்கள் கொண்ட இலுப்பை மரம்!நாம் வளர்க்கும் மரங்கள் ஆனது வெறும் நிழல்களை மட்டும் தருவதில்லை. அனைத்து உயிர்களும் சுவாசிக்கும் அளவில் பிராண வாயுவை உற்பத்தி செய்கின்றன. புவி வெப்பத்தை குறைத்து மழையை கொடுக்கின்றன. இயற்கையின் படைப்பில் இத்தகைய அற்புத குணங்களை கொண்டிருக்கும் மரங்கள் மனிதனுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. அந்த வகையில் தற்போது இலுப்பை மரத்தின் பயன்களை பற்றி பார்ப்போம்.

இலுப்பை மரமானது ஏரி, குளம், பூங்கா சாலை ஓரங்களிலும் பரந்து விரிந்திருக்கும் மரமாகும்.

we-r-hiring

இலுப்பை மரத்தின் வேரிலிருந்து பழம் வரை அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது. இலுப்பை வேரினை இடித்து நீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரை குடிநீராக குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும். சரும வியாதிகள் நீங்கும். தாய்ப்பால் சுரக்கும்.

இலுப்பை காயை கீறினால் பால் வெளியாகும் அந்த பாலை உடலில் தோன்றும் வெண்படலங்கள் மீது தடவினால் தேமல் போன்ற வெண்படலங்கள் விரைவில் குணமாகும்.

இலுப்பை விதையின் ஓட்டை நீக்கி உள்ளே இருக்கும் பருப்பை வதக்கி அரைத்து வீக்கங்கள் இருக்கும் இடங்களில் கட்டினால் வீக்கம் விரைவில் சரியாகும்.வேரிலிருந்து பழம் வரை மருத்துவ குணங்கள் கொண்ட இலுப்பை மரம்!

இலுப்பை பழமானது நல்ல இனிப்பு சுவை உடையது. எனவே இந்த பழத்தை அதிகம் உட்கொள்வதினால் மலச்சிக்கல் தீரும்.

தாய்ப்பால் சுரக்காத பெண்கள் இலுப்பை இலையை மார்பில் வைத்து கட்டி வர தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

இலுப்பையின் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உடலுக்கு வலிமையை கொடுக்கும். எண்ணெய் நீக்கப்பட்ட சக்கை பிண்ணாக்கு எனப்படும். இதை ஊற வைத்து அரைத்து வடிகஞ்சியுடன் சேர்த்து உடலில் தேய்த்து குளித்தால் சருமம் தொடர்பான வியாதிகள் குணமடையும். இதனை சோப்பிற்கு பதிலாகவும் பயன்படுத்தலாம்.

இம்முறைகளை ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ