Homeசெய்திகள்சென்னைரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகையை திருடிய நபரை போலீஸ் கைது

ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகையை திருடிய நபரை போலீஸ் கைது

-

- Advertisement -

ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 48 ஆயிரத்தை திருடியவர் கைது.

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகை பணமும், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றனர்.

we-r-hiring

இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி எல்லீஸ் சாலையில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையில் கோமதி என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 12ஆம் தேதி காலை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்யக்கூடிய சமீர் நிஜாம் என்பவர் பொங்கல் பரிசு தொகையை பெறுவதற்காக வந்திருக்கிறார்.

அப்போது ரேஷன் கடை ஊழியரின் இருக்கையில் இருந்த, 48 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு மாயமாகி இருக்கிறார்.

இது குறித்து கடை ஊழியர் கோமதி அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சமீர் நிஜாமை கைது செய்து அவரிடமிருந்து திருடப்பட்ட 48 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

MUST READ