spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகமல்ஹாசனின் 'தக் லைஃப்' பீரியாடிக் படமா?... ஆக்சன் படமா?

கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ பீரியாடிக் படமா?… ஆக்சன் படமா?

-

- Advertisement -

கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் பீரியாடிக் படமா?... ஆக்சன் படமா?நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தை நிறைவு செய்த பிறகு பிரபாஸ் உடன் இணைந்து கல்கி 2898AD திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

அதே சமயம் இந்தியன் 3 படத்தின் படப்பிடிப்புகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் கமல், எச். வினோத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கும் கமிட் ஆகியுள்ளார். மேலும் நாயகன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பல வருடங்கள் கழித்து மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். தக் லைஃப் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. இப்படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்க இருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள்2024 ஜூலை மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் பீரியாடிக் படமா?... ஆக்சன் படமா?

we-r-hiring

இந்நிலையில் தக் லைஃப் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது சமீபத்தில் வெளியான இப்படத்தின் அறிவிப்பு வீடியோவை பார்க்கும் பொழுது நாயகன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம். அதன்படி இப்படம் பீரியாடிக் படமாக உருவாக வாய்ப்பு இருப்பதாக பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி தக் லைஃப் படமானது சமகாலத்தில் நடக்கும் அதிரடி ஆக்சன் படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அறிவிப்பு வீடியோவில் ரசிகர்களை கவரும் நோக்கத்தில் பீரியாடிக் படம் போல் காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ