சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் நடைபெறும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் மா சுப்பிரமணியன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர்.


சென்னை தீவுத்திடலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை சங்கமம் விழாவை, 13 ஆம் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இருந்தும் 600-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
சென்னையில் ஜனவரி 14ஆம் தேதி முதல் வரும் 17-ஆம் தேதி வரை, செம்மொழிப்பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை உள்ளிட்ட 18 இடங்களில் நடைபெறுகிறது. இதில் கரகாட்டம், குயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து என 40 வகையான பாரம்பரிய கலைகள் இடம்பெறுகின்றன.
இந்நிலையில் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் நடைபெற்ற சங்கமம் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். அந்த நிகழ்ச்சியில்,
கரகாட்டம் , நீலகிரி உதயகுமார் குழுவினர் நடத்திய கோத்தர் இன மக்களால் ஆடப்படும் கோத்தர் நடனம், கவின் கலை பல்கலைகழக மாணவர்களின் இசை நிகழ்ச்சி,
சென்னை சங்கமம் நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்த ஆந்தைகுழி இளையராஜா, கிடாக்குழி மாரியம்மா, லட்சுமி பாடல் நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்றன அவற்றை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கண்டு களித்தார்.
