spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆலையில் பணிகளை நிறுத்த தமிழக அரசு உத்தரவு!

ஆலையில் பணிகளை நிறுத்த தமிழக அரசு உத்தரவு!

-

- Advertisement -

 

12 மணி நேர வேலை மசோதா வாபஸ்- எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிப்பு!
TN Govt

சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷ்னல் லிமிடெட் என்னும் நிறுவனம், திருவொற்றியூர் தாலுகா எர்ணாவூர் கிராமத்தில் உர தொழிற்சாலை ஒன்றையும், கட்டிவாக்கம் கிராமத்தில் அமோனியா சேமிப்பு கிடங்கும் ஒன்றையும் இயக்கி வருகிறது.

we-r-hiring

ஓரின சேர்க்கைக்கு இணங்க மறுத்த நண்பன் கொலை – திருவள்ளூரில் பரபரப்பு சம்பவம்

இந்த ஆலைக்கு கடற்கரையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் கப்பல்களில் இருந்து திரவ அமோனியா கடலுக்கு அடியில், பதியப்பட்ட குழாய் மூலமாகப் பெறப்பட்டு வருகிறது. இந்த குழாயில் ஏற்பட்ட கசிவு காற்றில் கலந்து சின்னக்குப்பம், பெரியக்குப்பம், நேதாஜி நகர், பர்மா நகர் ஆகிய பகுதிகளில் கடும் நெடியுடன் கூடிய கண் எரிச்சல் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனால் பொதுமக்கள் பல கிலோமீட்டர் தொலைவில் இருக்கக் கூடிய சமுதாய நலக்கூடம், தேவாலயங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 15- க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

என்னூர் உர ஆலையில் அமோனியா வாயுக்கசிவால் மக்கள் பாதிப்பு

இதற்கிடையே கசிவுக் கண்டறியப்பட்டு, உடனடியாக இயந்திரங்களைத் தனிமைப்படுத்தி நிலைமையை இயல்புக்கு கொண்டு வந்துள்ளதாக கோரமண்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தாங்கள் எப்போதும் உயரிய பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைபிடித்து வருவதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, ஆலையின் பணிகளை தற்காலிகமாக நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் குழுவினர் ஆய்வுகளை நடத்துவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

MUST READ