spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'அந்த கம்பீரத்தை இனி எப்போது காண்போம்'.... விஜயகாந்தின் மறைவிற்கு ஏ ஆர் முருகதாஸின் உருக்கமான பதிவு!

‘அந்த கம்பீரத்தை இனி எப்போது காண்போம்’…. விஜயகாந்தின் மறைவிற்கு ஏ ஆர் முருகதாஸின் உருக்கமான பதிவு!

-

- Advertisement -

'அந்த கம்பீரத்தை இனி எப்போது காண்போம்'.... கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்கு ஏ ஆர் முருகதாஸின் உருக்கமான பதிவு!விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்று மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த செய்தி தமிழகத்தையே உலுக்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் ரசிகர்கள் பலரும் பிரார்த்தனைகளையும் வழிபாடுகளையும் செய்து வந்தனர். ஆனால் இன்று அவர் உயிரிழந்த செய்தி ரசிகர்களையும் தொண்டர்களையும் தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

விஜயகாந்தின் மறைவிற்கு திரைப்பட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் தியாகராஜன், ரோகினி, வையாபுரி, ஆனந்தராஜ், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

we-r-hiring

இந்நிலையில் பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், “அந்த கம்பீரம் அந்த மனிதநேயம் அந்த நேர்மை ஆகியவற்றை இனி எப்போது காண்போம் கேப்டன் உங்கள் நினைவுக்கும் உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவில்லை ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான ரமணா திரைப்படத்தை இயக்கியவர் ஏ ஆர் முருகதாஸ் . மேலும் இந்த ரமணா திரைப்படம் ஏ ஆர் முருகதாஸுக்கும் விஜயகாந்துக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ