Homeசெய்திகள்தமிழ்நாடுமுதல்வரும், ஆளுநரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்- தமிழிசை

முதல்வரும், ஆளுநரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்- தமிழிசை

-

- Advertisement -

துணை நிலை ஆளுநர்கள் நிர்வாகத்தில் எது சரியாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அதை செய்கிறார்கள். நான் என்ன செய்ய முடியுமோ அதை தான் செய்ய முடியும் என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

tamilisai soundararajan

we-r-hiring

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் அரபிந்தோ அறக்கட்டளை சார்பில் பொங்கல் விழா நடந்தது. இதில் ஆளுநர் தமிழிசை, அறக்கட்டளை பொறுப்பாளர் ஜெயந்தி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை, “துணை நிலை ஆளுநர்கள் நிர்வாகத்தில் எது சரியாக இருக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அதை செய்கிறார்கள். நான் என்ன செய்ய முடியுமோ அதை தான் செய்ய முடியும். துணைநிலை ஆளுநர் பொறுப்பு என்ன என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். துணைநிலை ஆளுநர் நேர்மறையாக செயல்பட்டால் கூட சில விவாதங்கள் வந்து விடுகின்றன. அதனால் முதல்வரும், ஆளுநரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.

தமிழகத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் மாறுபாடு இல்லை.. தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு மிகப் பெரிய சரித்திரம் உள்ளது. மிக கடுமையான முயற்சிக்கும் போராட்டத்திற்கும் பிறகு தமிழ்நாடு என்ற பெயர் கிடைத்துள்ளது. எளிதில் தமிழ்நாடு என்ற பெயரை புறந்தள்ளி விடக்கூடாது. சரியான கருத்து யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழக அரசு என்று கூறுகிறோம். தமிழ்நாடு சட்டமன்றம் என்று கூறுகிறோம். இதில் எந்த வேறுபாடும் இல்ல, ஒன்றை விட்டு ஒன்று எடுக்க முடியாது.

ஆளுநர்கள் வருகின்ற கோப்புகளை கோப்புகளாக மட்டும் பார்ப்பதில்லை. மக்கள் முகங்களாக பார்க்கிறோம். மக்களுக்கான நல்ல திட்டங்களை தான் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். மக்களுக்கு எது நல்லதோ அதை தான் செய்து கொண்டிருக்கின்றோம்” என்றார்.

MUST READ