spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநிவின் பாலி, சூரி கூட்டணியின் ஏழு கடல் ஏழு மலை.... முன்னோட்டம் குறித்த அறிவிப்பு!

நிவின் பாலி, சூரி கூட்டணியின் ஏழு கடல் ஏழு மலை…. முன்னோட்டம் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

நிவின் பாலி, சூரி கூட்டணியின் ஏழு கடல் ஏழு மலை.... முன்னோட்டம் குறித்த அறிவிப்பு!கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற காலத்தால் அழியாத வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராம். இவரின் படங்களுக்கு பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் இவர் மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நிவின் பாலி உடன் இணைந்து சூரி, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்பே ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.நிவின் பாலி, சூரி கூட்டணியின் ஏழு கடல் ஏழு மலை.... முன்னோட்டம் குறித்த அறிவிப்பு! இந்நிலையில் வருகின்ற 2024 ஜனவரி 2ம் தேதி மாலை 5.01 மணி அளவில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் முன்னோட்டம் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் போஸ்டர்களை ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் GLIMPSE OF IMMORTAL LOVE என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

we-r-hiring

ஏழு கடல் ஏழு மலை படமானது, ராமின் மற்ற படங்களைப் போல வித்தியாசமான கதைக்களத்தில் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ