- Advertisement -
உடல் தானம் செய்யப்பட்ட பெண்ணின் உடலுக்கு அரசு மரியாதை செய்தனர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர், சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன்.
திருத்தணி ஒன்றியத்தில் உள்ளது கார்த்திகேயபுரம் ஊராட்சியில் நேதாஜி நகர் பகுதியில் வசிப்பவர் பக்தவச்சலம் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக இறந்துவிட்டார்.இவரது மனைவி நாகரத்தினம் வயது(61) இந்த பகுதியில் வசித்து வந்தார்.
திடீரென்று இவருக்கு ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலவு குறைவு ஏற்பட்டு உடல் நலக்குறைவால் காலமானார்.நாகரத்தினம் உடலை அரசு மருத்துவமனைக்கு முழு உடல் தானம் இவரது குடும்பத்தினர் வழங்கினார்கள்.
இதனை அடுத்து இவரது உடலுக்கு திருவள்ளூர் கலெக்டர் டாக்டர் பிரபுசங்கர் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் ஆகியோர்கள் அரசு சார்பில் முழு மரியாதை செய்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.இந்த நிகழ்வில் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர், திருத்தணி வட்டாட்சியர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.