பிரபல இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனின் இரண்டாவது மகன் பிரேம்ஜி. இவர் தனது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கிய பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அந்த வகையில் சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதே சமயம் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் தளபதி 68 படத்திலும் நடித்து வருகிறார்.
நடிகர் பிரேம்ஜி சமீபத்தில் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சத்திய சோதனை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரன் பேட்டி ஒன்றில் பிரேம்ஜிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதுதான் தனது மனைவியின் ஆசை எனவும் ஆனால் பிரேம்ஜி திருமணத்திற்கு மறுக்கிறார் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் பல நாட்களாகவே முரட்டு சிங்கிளாக வலம் வந்து கொண்டிருந்த பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் பிரேம்ஜி தனது சமூக வலைதள பக்கத்தில், “புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடம் எனக்கு திருமணம் நடைபெற இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Happy new year. This year I am getting married. Dot.
— PREMGI (@Premgiamaren) January 1, 2024

மேலும் மணப்பெண் யார் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.