spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலவ் இருக்கா? இல்லையா? அதிதி ராவ் - சித்தார்த் ஜோடியிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்...

லவ் இருக்கா? இல்லையா? அதிதி ராவ் – சித்தார்த் ஜோடியிடம் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்…

-

- Advertisement -
தமிழ் சினிமாவில் அவ்வப்போது காதல் கிசுகிசுக்கள் வருவதும் உண்டு, மறைவதும் உண்டு. அதைப் பற்றி தகவல்கள் பரபரப்பாக வெளியாகினும், சம்பந்தப்பட்டவர்கள் அமைதியாகவே இருப்பார்கள். ஒன்றாக சேர்ந்து சுற்றுபவார்கள், விழாக்களில், நிகழ்வுகளில் கலந்து கொள்வார்கள். ஆனால், தங்களுக்குள் எதுவும் இல்லை நட்புதான் என விளக்கம் அளிப்பது வழக்கமாகும்.

அப்படியான ஒரு ஜோடி சித்தார்த், அதிதி ராவ். சித்தார்த் இதற்கு முன்பாகவே திருமணம் ஆனவர். அவரது மனைவியை விவகாரத்து செய்த பின் சமந்தாவை காதலித்தார். அவரும் சமந்தாவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று சில வருடங்கள் முன்பே செய்திகள் வந்தது. ஆனால், இருவரும் திடீரெனப் பிரிந்தனர். இதைத் தொடர்ந்து நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். அதேபோல, நடிகை அதிதியும் ஏற்கனவே திருமணமாகி பிரிந்துவிட்டார். இந்நிலையில் அதிதியும் சித்தார்த்தும் மாக சமுத்திரம் படத்தில் நடித்தபோது, காதலில் விழுந்துள்ளனர். அதன்பின் பெரும்பாலான இடங்களில் இருவரும் சேர்ந்து இணைந்து சுற்றினர்.

தாங்கள் இருவரும் காதலிப்பதை வெளிப்படையாக சொல்லாமல், இருக்கின்றனர். புத்தாண்டையும் இருவரும் சேர்ந்து கொண்டாடி, ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதே சமயம், ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்களா, இல்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

MUST READ