spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசாந்தனு, அசோக் செல்வன் நடிக்கும் 'ப்ளூ ஸ்டார்'... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சாந்தனு, அசோக் செல்வன் நடிக்கும் ‘ப்ளூ ஸ்டார்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -

சாந்தனு, அசோக் செல்வன் நடிக்கும் 'ப்ளூ ஸ்டார்'... ரிலீஸ் தேதி அறிவிப்பு!நடிகர் சாந்தனு, பிரபல நடிகரும் இயக்குனருமான பாக்யராஜின் மகனாவார். இவர் தனது சிறுவயதிலேயே சினிமாவில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து சக்கரகட்டி, அம்மாவின் கைப்பேசி போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர். கடைசியாக ராவண கோட்டம் எனும் திரைப்படத்திலும் MY3 எனும் வெப் தொடரிலும் நடித்திருந்தார்.

அதே சமயம் நடிகர் அசோக் செல்வன் ஓ மை கடவுளே, சூது கவ்வும், பீட்சா 2, தெகிடி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அது மட்டும் இல்லாமல் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9ம் தேதி வெளியான போர் தொழில் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து சபாநாயகன் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.

we-r-hiring

இந்நிலையில் அசோக் செல்வன், சாந்தனு ஆகியோர் இணைந்து ப்ளூ ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதியை பட குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி ப்ளூ ஸ்டார் படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சாந்தனு, அசோக் செல்வன் நடிக்கும் ப்ளூ ஸ்டார்... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இப்படமானது இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் எஸ் ஜெயகுமாரின் இயக்கத்திலும் உருவாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ