பிரபல இயக்குனரும் நடிகர் தனுஷின் அண்ணனுமான செல்வராகவன், இயக்குனர் மட்டுமல்லாமல் எழுத்தாளராகவும் வலம் வருகிறார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியானவை. அந்த வகையில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கிடையில் தனுஷ் நடிப்பில் அல்லாமல் இவர் இயக்கிய 7 ஜி ரெயின்போ காலனி மற்றும் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களும் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இவ்வாறு பல வெற்றி படங்களை கொடுத்த செல்வராகவன் அடுத்ததாக என்ன படம் இயக்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதன்படி 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகத்தை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
சமீப காலமாக செல்வராகவன் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி பீஸ்ட், பர்ஹானா, பகாசூரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து செல்வராகவன் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கு இருப்பதாக தற்போதைய தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது மலையாள நடிகர் ஜெயராம் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ஆபிரகாம் ஓஸ்லர் எனும் மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெயராம், செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் தான் நடிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.
மேலும் ஆபிரகாம் ஓஸ்லர் திரைப்படத்தில் ஜெயராமுடன் இணைந்து நடித்த அனஸ்வரா ராஜனும் இப்படத்தில் இணைய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. இது சம்பந்தமான அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.