பராசக்தி படத்தின் பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் தற்போது பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அந்த வகையில் அண்மையில் வெளியான ‘இட்லி கடை’ படத்தில் இசையமைத்திருந்தார். இது தவிர சூர்யா 46, மகுடம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வரும் பராசக்தி படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்த படம் ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கும் 100வது படமாகும். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது.
சமீபத்தில் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த நிலையில் ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தின் பாடல்கள் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி அவர், “பராசக்தி பாடல்கள் விரைவில் வெளியாகும்” என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


