spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாலக்காடு பகவதி அம்மனை தரிசனம் செய்த அஜித்.... கவனம் ஈர்க்கும் டாட்டூ!

பாலக்காடு பகவதி அம்மனை தரிசனம் செய்த அஜித்…. கவனம் ஈர்க்கும் டாட்டூ!

-

- Advertisement -

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித், பாலக்காடு பகவதி அம்மனை தரிசனம் செய்துள்ளார். அப்போது அவர் மார்பில் குத்தப்பட்டிருந்த டாட்டூ ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.பாலக்காடு பகவதி அம்மனை தரிசனம் செய்த அஜித்.... கவனம் ஈர்க்கும் டாட்டூ!

நடிகர் அஜித் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து கார் ரேஸிங்கில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் அஜித் தொடர் வெற்றிகளை கைப்பற்றி தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து வருகிறார். அதே சமயம் இவர் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி அமைத்து தனது 64வது திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதன் படப்பிடிப்புகளும் 2025 நவம்பர் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலக்காடு பகவதி அம்மனை தரிசனம் செய்த அஜித்.... கவனம் ஈர்க்கும் டாட்டூ!மேலும் இந்த மாதம் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நடிகர் அஜித் சமீபத்தில் தனது குடும்பத்துடன் பாலக்காட்டில் உள்ள ஊட்டுகுளங்கர பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பாலக்காடு பகவதி அம்மனை தரிசனம் செய்த அஜித்.... கவனம் ஈர்க்கும் டாட்டூ!அப்போது ரசிகர்களும் அஜித்துடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே சமயம் அஜித் தனது மார்பில் குத்தி இருக்கும் டாட்டூவும் ரசிகர்களின் கவனம் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.பாலக்காடு பகவதி அம்மனை தரிசனம் செய்த அஜித்.... கவனம் ஈர்க்கும் டாட்டூ! அதாவது அஜித், ஊட்டுகுளங்கர பகவதி அம்மன் படத்தை தனது வலது மார்பில் பச்சை குத்தியுள்ளார். இந்த நிரந்தர டாட்டூவானது ‘குட் பேட் அக்லி’ படத்தில் பணிபுரிந்த டாட்டூ கலைஞர்களால் குத்தப்பட்டு இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ