spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கலைஞன்!

சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து கலைஞன்!

-

- Advertisement -

 

we-r-hiring

இந்தியாவே கொண்டாடும் இசைப் புயலுக்கு இன்று (ஜன.06) பிறந்தநாள். அவரது திரைப்பயணத்தை சற்று திரும்பி பார்ப்போம்.

மத்திய அரசின் பாரபட்ச போக்கிற்கு தமிழ்நாட்டு மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் – கே.எஸ்.அழகிரி

ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமாவின் இசைப் புயல். இளம் தலைமுறையினரின் இதயங்களை இசையால் ஈர்த்துக் கொண்ட ஆஸ்கர் நாயகன். இவர் தமிழ் சினிமா தொடங்கி, பாலிவுட், ஹாலிவுட் என திரை இசையைக் கடந்து தனி இசையால் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இயக்குநர் மணிரத்னத்தின் ரோஜா திரைப்படம் மூலமாக கடந்த 1992- ஆம் ஆண்டில் தொடங்கியது ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணம். இவரது ஆரம்பமே அதிரடி என்று சொல்லலாம். ரோஜா படத்தின் பாடல்கள் இந்தியா முழுவதும் ஹிட் ஆனது மட்டுமின்றி, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

அதன் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணம் உச்சத்தை நோக்கி செல்லத் தொடங்கியது. திருடா திருடா, காதலன், டூயட், பம்பாய், இந்திரா, இந்தியன், முதல்வன், உயிரே, தாஜ்மஹால், காதலர் தினம், அலை பாயுதே, பாய்ஸ், ஆயுத எழுத்து, கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் வரை முக்கிய படங்கள் எல்லாம் ஹிட் ஆனது.

பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை மன்னிப்பு கேட்க போலீசார்!

பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் திரைப்படங்களுக்கு இசையமைத்ததுடன், இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வைப் காண்பித்தார் ஏ.ஆர்.ரஹ்மான். இசை மீதான பற்றை போலவே, தமிழ் மொழி மீது அதீத பற்றுக் கொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான்.

ஆறு முறை தமிழக அரசின் மாநில சிறப்பு விருது, தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருது, 13 முறை பிலிம் பேர் விருது பல சர்வதேச அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.

MUST READ