

தமிழகம் முழுவதும் நிர்ணயிக்கப்பட்டதை விடக் கூடுதலாக 104.51% அளவுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்
சென்னையில் நேற்று (ஜன.08) நடந்த போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினருடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால் நள்ளிரவு முதல் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளன. சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் உள்ளிட்டவை வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், சேலம், நெல்லை கோட்டங்களில் இருந்து முழுமையாக அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன; மதுரை கோட்டத்தில் 94.89% பேருந்துகளும், கோவை கோட்டத்தில் 90.38% பேருந்துகளும், கும்பகோணம் கோட்டத்தில் 93.34% பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் காலை 05.00 மணி நிலவரப்படி 166.30% அளவுக்கு 1,071 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக 644 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில் 1,071 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் போக்குவரத்துக் கழக கோட்டத்தில் இருந்து 76.23% பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தம்!
இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், “தமிழகத்தில் வழக்கம் போல் பேருந்துகள் இயங்கி வருகின்றன; தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து இயக்கம் பற்றி கண்காணித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
