திரைத் துறையில் பணியாற்றி வரும் பிரபலங்களின் அடுத்தடுத்த தலைமுறையினர்களும் சினிமாவில் பயணிக்க தொடங்கி விட்டார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரின் மகன் ஜேசன் சஞ்சய், படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தும், அதனை தவிர்த்து தற்போது இயக்குனராக உருவெடுத்துள்ளார்.
அதன்படி ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் இயக்கப் போவதாக சில நாட்களுக்கு முன்பாக அறிவிப்புகள் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் பூஜையும் சென்னையில் நடைபெற்ற நிலையில் ப்ரீ ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் நடிகர் கவின் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே பல தகவல்கள் சமூக வலைதளங்களில் கசிந்திருந்தது. இந்நிலையில் இதன் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி வருகின்ற பொங்கல் தினத்தில் ஜேசன் சஞ்சய் இயக்கம் இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேசன் சஞ்சய் தளபதி விஜயின் மகன் என்பதால் அவர் எந்த மாதிரியான கதையை கையில் எடுத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. எனவே விரைவில் இது குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


