2024 ம் ஆண்டின் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளைக் கொண்ட படங்களில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள “கேப்டன் மில்லர்” திரைப்படமும் ஒன்று. ராக்கி, சாணி காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரிட்டிஷ் காலத்திய பீரியட் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. நாளை இப்படம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 900 திரையரங்குகளுக்கும் மேலாக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
இதுவரை வெளியான தனுஷ் படங்களிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியாகும் படம் இதுதான். ஏற்கனவே எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருந்த இப்படத்தில் கிளைமாக்ஸ்-ல் அதிக வன்முறை காரணமாக நான்கு நிமிட காட்சிகள் தணிக்கை குழுவினரால் வெட்டி எடுக்கப்பட்டன. இதிலிருந்து படம் ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படமாக இருக்கும் என்பது உறுதியானது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஓவர் சீசில் லைகா நிறுவனம் வெளியிடுகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் பல திரையரங்குகளில் 90 சதவீதத்திற்கும் மேல் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. முதல் நாள் வசூலிலும் கேப்டன் மில்லர் தனுஷின் கெரியர் பெஸ்ட் படமாக மாறும் வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளது. படத்திற்கு பாசிட்டிவ் ரிவியூ கிடைத்தால் நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்து கேப்டன் மில்லர் சாதனை படைப்பது உறுதி.
- Advertisement -