
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

தாய்ப்பால் அதிகம் சுரக்க இதை பின்பற்றுங்கள்?
மொஹாலியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தது.
பின்னர் விளையாடிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஷிவம் துபே 60 ரன்களையும், ஜிதேஷ் சர்மா 31 ரன்களையும், திலக் வர்மா 26 ரன்களையும் எடுத்தனர்.
ஆரோக்கியமான கல்யாண முருங்கை அடை செய்யலாம் வாங்க!
ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் முகமது நபி 42 ரன்களையும், அஸ்மத்துல்லா ஓமர்சாய் 29 ரன்களையும், கேப்டன் சத்ரான் 25 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணியில் அக்சர் படேல், முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும், ஷிவம் துபே 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.