Homeசெய்திகள்தமிழ்நாடுதொழிலதிபரை கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்

தொழிலதிபரை கடத்தி ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பல்

-

- Advertisement -

சென்னை அம்பத்தூரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெயராமன் என்பவரை மயிலாப்பூரில் கடத்தி, 20 லட்சம் ரூபாய் கேட்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

we-r-hiring

அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதிய சேர்ந்த ஜெயராமனும் தேவராஜூம் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனர். அதில் ஜெயராமன், தேவராஜ்க்கு 20 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டி உள்ளது. தொடர்ந்து பணம் கேட்டுவந்த தேவராஜ், கொடுக்காததால் ஜெயராமனை மயிலாபூரில் வைத்து தேவராஜ் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல் நேற்று இரவு கடத்தி மிரட்டி 20 லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர். இது குறித்து ஜெயராமனின் மனைவியிடம் தேவராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஜெயராமனின் மனைவி சிவரஞ்சனி கணவர் கடத்தப்பட்டதாக கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் மூன்று மணி நேரத்தில் கடத்தப்பட்ட ஜெயராமனை மீட்டனர். மேலும் ஆறு பேர் கொண்ட கடத்தல் கும்பலை அதிரடியாக கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தலில் ஈடுபட்ட தேவராஜ், திவாகர்,ஸ்டீபன் ராஜ், பாலாஜி, ஹமநாதன், தினேஷ் ஆகியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடன் கொடுத்த பணத்தை திரும்ப வசூலிக்க கடத்தலில் ஈடுப்பட்ட தேவராஜ் உள்ளிட்ட ஆறு பேர் சிறைக்கு செல்லவுள்ளனர்.

MUST READ