- Advertisement -
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அயலான் திரைப்படம் இன்று கோலாகலமாக திரையரங்குளில் வெளியாகி இருக்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீடுகள் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளும் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன. அதற்கு காரணம் பொங்கலை முன்னிட்டு கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அயலான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தை ரவிக்குமார் இயக்கி உள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார்


படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்படபலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் நீண்ட இடைவௌியாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், இன்று ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. திரையரங்குகளில் அயலான் படத்தை காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குடும்பம் குடும்பமாக சென்று அயலான் படத்தை கண்டு ரசித்து வருகின்றனர்.



