Homeசெய்திகள்தமிழ்நாடுஜி.கே. வாசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு! கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோருகிறார்

ஜி.கே. வாசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு! கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோருகிறார்

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

ops

we-r-hiring

இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தப்படி அந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் த.மா.கா. க்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது இடைத்தேர்தலில் த.மா.க போட்டியிட விருப்பம் இல்லை என அக்கட்சியின் தலைவர் ஜி. கே.வாசன் அதிமுக நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால் அங்கு அதிமுக சார்பில் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடவுள்ளதாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அவருடன் வைத்திலிங்கம், மனோ பாண்டியன், புக்ழேந்தி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதேபோல் இன்று மாலை 4 மணிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கவுள்ளார்.தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன்,புரட்சி பாரதம் ஜெகவி மூர்த்தியையும் ஓ.பி.எஸ் சந்திக்கவுள்ளார்.

 

MUST READ