
பொங்கல் பண்டிகை காரணமாக, மதுரையில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

நாம் தமிழர் கட்சியினர் மீது பாஜகவினர் கொலைவெறி தாக்குதல் – சீமான் கண்டனம்!
மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள காய்கறி சந்தையில், பொங்கல் பண்டிகையையொட்டி, காய்கறிகளின் விலை 20% முதல் 40% வரை அதிகரித்துள்ளது. மேலும் மார்கழி மாதத்தில் வழக்கத்தை விட அதிகளவில் பனிப்பொழிவு நிலவுவதால் காய்கறிகளின் வரத்து மற்றும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பண்டிகைக்காலம் மற்றும் வரத்துக் குறைவுக் காரணமாக, காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
மார்க்கெட்டில் கடந்த வாரம் ரூபாய் 40- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கத்திரிக்காய், தற்போது 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெண்டைக்காய் 70 ரூபாய்க்கும், அவரைக்காய் 70 ரூபாய்க்கும், கேரட் கிலோ 50 ரூபாய்க்கும், சோயா 80 ரூபாய்க்கும், சின்னவெங்காயம் 30 ரூபாய் முதல் 60 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 20 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 50 ரூபாய் முதல் 60 ரூபாய்க்கும், பீட்ருட் 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 40 ரூபாய் முதல் 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ரூபாய் 100- க்கும், முட்டைக்கோஸ் 30 ரூபாய்க்கும், பாகற்காய் 50 ரூபாய் முதல் 60 ரூபாய்க்கும் கறிவேப்பிலை 50 ரூபாய்க்கும், புதினா மற்றும் மல்லி 30 ரூபாய் முதல் 40 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழக மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது – டிடிவி தினகரன் கண்டனம்
காய்கறிகளின் விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிப்பைச் சந்தித்துள்ளனர். எனினும், பண்டிகைக்கு பிறகு காய்கறிகளின் விலை கணிசமாகக் குறையும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


