- Advertisement -
கோலிவுட் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் விஷால். தமிழில் செல்லமே படத்தின் மூலம் அவர் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற அவர் தனது இரண்டாவது படத்தின் மூலம் ஆக்ஷன் நாயகனாக அவதாரம் எடுத்தார். லிங்குசாமி இயக்கத்தில் வெளியான சண்டக்கோழி படம் மாபெரும் வெற்றி பெற்றது. அடுத்தடுத்து விஷாலுக்கு பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின. திமிரு, சத்யம், தாமிரபரணி, துப்பறிவாளன், என பல திரைப்டங்களில் நடித்துள்ளார்.
இறுதியாக அவரது நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கௌதம் மேனன், சமுத்திரக்கனி, மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
‘ரத்னம்’ படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷால் எடுத்த வீடியோ இணையத்தில் வைரல்..!
#விஷால் #vishal pic.twitter.com/TgM4yr6g0g
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) January 16, 2024