Homeசெய்திகள்சினிமாபாக்ஸ் ஆபிஸை திணற வைக்கும் 'ஹனுமான்'.....நான்கு நாட்களில் இத்தனை கோடியா?

பாக்ஸ் ஆபிஸை திணற வைக்கும் ‘ஹனுமான்’…..நான்கு நாட்களில் இத்தனை கோடியா?

-

- Advertisement -

பாக்ஸ் ஆபிஸை திணற வைக்கும் 'ஹனுமான்'.....நான்கு நாட்களில் இத்தனை கோடியா?இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் வெளியாகியுள்ள தெலுங்கு பான் இந்திய திரைப்படம் ஹனுமான். இந்தியக் கடவுளான ஹனுமானை மையப்படுத்தி சூப்பர் ஹீரோ படமாக இப்படம் உருவாகியுள்ளது. பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 12 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியது. இந்திய மொழிகள் மட்டுமின்றி ஜப்பானிய, கொரிய, ஸ்பானிஷ் மொழிகள் உட்பட 11 மொழிகளில் இப்படம் வெளியானது. அட்டகாசமான வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாக அமைந்தன. பாக்ஸ் ஆபிஸை திணற வைக்கும் 'ஹனுமான்'.....நான்கு நாட்களில் இத்தனை கோடியா?இந்நிலையில் படம் வெளியான 4 நாட்களில் 100 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பெரிய சம்பவத்தை செய்துள்ளது. தமிழகத்தில் இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பை இந்நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேசமயம் இந்த படம் 100 கோடி வசூலித்திருப்பதை படத்தின் இயக்குனர் பிரசாந்த் வர்மாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “மை ஃபர்ஸ்ட் சென்சுரி இன் ஃப்லிம்ஸ்” என்று மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். படத்தில் நட்சத்திர நடிகர்களுக்காக செலவிடாமல் தொழில்நுட்ப விஷயங்களுக்காக செலவிடப்பட்டது படத்தின் தரத்திற்கு பெருமளவு கை கொடுத்துள்ளது. திரையரங்குகளில் இந்த சங்கராந்திக்கு குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய படமாக ஹனுமான் அமைந்துள்ளது என்றும் மக்கள் கருதுகின்றனர்.

மேலும் இந்த படத்தில் தேஜா சஜா உடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், வினை ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு அனுதீப் தேவ், ஹரி கௌரா, கிருஷ்ணா சௌரப் ஆகியோர் இணைந்து இசை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ