சென்னை அடுத்த மதுரவாயல் அருகே அடையாளம்பட்டு பகுதியில் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லேக் சிட்டி மற்றும் சென்னை ஸ்போர்ட்டனா அகாடமி இணைந்து போலியோ விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி இன்று காலை 6 மணியளவில் நடைபெற்றது.


இப்போட்டியில் சுமார் 1000 த்திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் மாணவ மாணவிகள், தொடர் ஓட்டம் வீரர்கள், சமூக ஆர்வலர்கள் என திரளாக பங்கு பெற்றனர்.
கையில் பதாகைகள் ,டீ சர்ட்டுகள் அணிந்து போலியோ விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் கலந்து கொண்டு மாரத்தானில் ஓடினர்.
5 கிலோ மீட்டம் மற்றும் 2.5 கிலோ மீட்டர் தூரம் தொடர் மாரத்தான் போட்டியானது இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு வயதினரும் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போலியோ விழிப்புணர்வு மாரத்தானை ஓய்வு பெற்ற செக்கலிங்கம் (IPS) மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லேக் சிட்டி District Governor நந்தகுமார் இணைந்து கொடியசைத்து துவங்கி வைத்தனர்.
போலியோ விழிப்புணர்வு மாரத்தானில் முதல் மூன்று இடங்களை வென்றவர்களுக்கு ரோட்டரி கிளப் சார்பில் சான்றிதழ்கள், பதக்கங்கள், பரிசு கோப்பைகள் வழங்கி கெளரவித்தார்கள்.
அதிகாலையில் ஆர்வமுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலியோ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தானில் பங்கேற்று ஓடியது குறிப்பிடத்தக்கது.


