
பிரதமர் நரேந்திர மோடி, நாளை (ஜன.19) தமிழகம் வரவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் பொதுத்துறைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தங்கம் வாங்க சரியான நேரம்….தொடர்ந்து குறையும் தங்கம் விலை…
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நாளை (ஜன.18) தமிழகம் வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ராமேஸ்வரம் செல்கிறார். அங்கு ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, புனிதநீரை அயோத்திக்கு ராமர்கோயிலுக்கு கொண்டு செல்லவுள்ளார்.
இந்த நிலையில், பிரதமரின் வருகையையொட்டி, சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர் நந்தகுமார் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக் கூட்டத்தில், சட்டம்- ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அருண் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பிப்.01- ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை!
இதனிடையே, பிரதமரின் வருகையையொட்டி, சென்னையில் 5 அடுக்கு காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. சுமார் 22,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.