ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்த நேர்காணல் நிறைவு. இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை விரைவில் காங்கிரஸ் தலைமை அறிவிக்கும்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றபின் செய்தியாளர்களை சந்தித்த தினேஷ் குண்டுராவ் பேசியது,

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு குறித்து நேர்காணல் நிறைவுபெற்றதாக கூறினார்.
இதற்கான பட்டியலை காங்கிரஸ் மேலிடத்திற்கு ஓரிரு நாட்களில் அனுப்பபடும். இறுதி வேட்பாளரை தேசிய தலைமை விரைவில் அறிவிக்கும்.
ஏற்கனவே, பிரச்சாரத்தை தொடங்கி விட்டோம், எதிர்கட்சி பல்வேறு பிரிவாக செயல்படுகிறது. குழப்பத்தில் உள்ள அவர்கள் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம் என்றார்.
தேர்தல் பிரச்சாரத்தை பொறுத்தவரை இடைத்தேர்தல் என்பதால் தேசிய தலைவர்கள் வர வாய்ப்பில்லை, மாநில தலைவர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்வோம். காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
முன்னதாக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை ஈ வி கே எஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் மேற்கொண்ட பணிகள் குறித்த தகவலை குண்டு ராவிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சம்பத்,
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பப்படுகிறேன், என்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளேன். வேட்பாளர் தேர்வு குறித்து மேலிடம் முடிவு செய்யும் என்றார்.
