Homeசெய்திகள்தமிழ்நாடுதிருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது- ஈபிஎஸ்

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது- ஈபிஎஸ்

-

- Advertisement -

மணமக்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் தான் இல்லற வாழ்க்கை சிறக்கும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

eps

we-r-hiring

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிமுக முன்னாள் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் மகன் சச்சின் ராம் என்பவருக்கும், கூடலூர் அதிமுக நகர செயலாளர் அருண்குமார் மகள் பிரதிஷ்டா தேவிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இந்த விழாவிற்கு நேரில் வருகை தந்து திருமணத்தை நடத்தி வைத்து மனமக்களை ஆசிர்வாதம் செய்து வாழ்த்தி பேசினார். இந்த திருமண விழாவில், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.சி.கருப்பணன், ராஜேந்திர பாலாஜி மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா உள்பட முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏக்கள் உள்பட ஏராளமான இ.பி.எஸ் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

மணமேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. திருமணம் என்பது ஒவ்வொருவருக்கும் பொன்னான நாள். இன்றைய சூழலில் திருமணம் என்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு குழந்தை பெற்றவுடன் அதை சீராட்டி, பாலூட்டி வளர்த்து திருமணம் என்ற அற்புதமான நிகழ்வில் இணைய வைக்கின்றனர். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் தான் இல்லற வாழ்க்கை சிறக்கும்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருவரும் மணமக்களை வாழ்த்தி கொண்டிருக்கிறார்கள். அவரோடு என்னுடைய வாழ்த்துக்களும் மணமக்களுக்கு உண்டு” எனக் கூறி மனமக்களை வாழ்த்தினார்.

MUST READ