spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராட்சசன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

ராட்சசன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

ராட்சசன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் அயலான் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதேசமயம் சிவகார்த்திகேயன், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன், பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இது சம்பந்தமான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.

இதற்கிடையில் அயலான் 2 படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் குட் நைட் பட இயக்குனர் விநாயகர் சந்திரசேகரன் இயக்கத்திலும் நடிப்பதற்கு சிவகார்த்திகேயன் கமிட்டாகியுள்ளார் என்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

we-r-hiring

இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வரும் சிவகார்த்திகேயன், ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்ற புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்காக இயக்குனர் ராம்குமார், நடிகர் தனுஷுக்காக தயார் செய்த கதையை ஒரு சில காரணங்களால் இயக்க முடியாமல் போனது. இந்நிலையில் அதே கதையை சிவகார்த்திகேயனிடம் கூறி, ஓகே பண்ணிவிட்டார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ராட்சசன் பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

மேலும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் எனும் கிரைம் திரில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஹிட் கொடுத்தது. அதைத் தொடர்ந்து ராம்குமார் மீண்டும் விஷ்ணு விஷாலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். அடுத்ததாக ராம்குமார், சிவகார்த்திகேயனை இயக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ