ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ வெளியிட்டவர் கைது… டெல்லி போலீஸ் அதிரடி…
- Advertisement -
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோவை வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் அறிமுகமாக இன்று இந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ரிஷப் ஷெட்டி இயக்கிய கிரிக் பார்ட்டி படத்தில் அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார். இத்திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. தெலுங்கு மட்டுமன்றி தமிழிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து ராஷ்மிகாவின் திரைவாழ்வில் ஏறுமுகம் தான்.

தொடர்ந்து தெலுங்கில் அடுத்தடுத்து படம் நடித்து வந்தார். தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்திருந்தார். அப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினர். தொடர்ந்து விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். அடுத்து பாலிவுட் பக்கம் சென்ற அவர் அடுத்தடுத்து இந்தி படங்களில் கமிட்டாகி வருகிறார். அவரது நடிப்பில் இறுதியாக அனிமல் படம் வௌியானது. இதனிடையே, கடந்த ஆண்டு ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

ராஷ்மிகாவை ஆபசமாக சித்தரித்து வெளியிட்ட அந்த வீடியோ சர்ச்சையை கிளப்பியது. இதைத்தொடர்ந்து டெல்லி போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சில மாதங்களுக்கு முன்பாக விசாரணைக்காக 4 பேரை கைது செய்ததாகக கூறப்பட்டது. தற்போது டீப் பேக் வீடியோ வெளியிட்ட ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.