Homeசெய்திகள்சினிமாவிஷால் நடிக்கும் 'ரத்னம்'..... சத்தமே இல்லாமல் படப்பிடிப்பை முடித்த ஹரி!

விஷால் நடிக்கும் ‘ரத்னம்’….. சத்தமே இல்லாமல் படப்பிடிப்பை முடித்த ஹரி!

-

- Advertisement -

விஷால் நடிக்கும் 'ரத்னம்'..... சத்தமே இல்லாமல் படப்பிடிப்பை முடித்த ஹரி!நடிகர் விஷால் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து தாமிரபரணி, பூஜை உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 34 வது படத்தில் நடித்து வருகிறார் விஷால். ரத்னம் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் சமுத்திரகனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

அதேசமயம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதை தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி கவனம் பெற்றது. சமீபத்தில் கூட ஒரே ஷாட்டில் சண்டை காட்சி படமாக்கப்பட்டதாக வீடியோ வெளியிடப்பட்டது. இவ்வாறு அடுத்தடுத்த அப்டேட்டை வெளியிட்டு படக்குழுவினர் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகின்றனர்.விஷால் நடிக்கும் 'ரத்னம்'..... சத்தமே இல்லாமல் படப்பிடிப்பை முடித்த ஹரி!

இந்நிலையில் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இயக்குனர் ஹரி, ரத்னம் படப்பிடிப்பு முழுவதையும் முடித்து விட்டதாகவும் விடுபட்ட காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்கப்பட இருப்பதாகவும் நம் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். எம். சுகுமார் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

MUST READ