spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதி.மு.க. இளைஞரணி மாநாடு இன்று தொடங்குகிறது.....விழாக்கோலம் பூண்ட சேலம் மாவட்டம்!

தி.மு.க. இளைஞரணி மாநாடு இன்று தொடங்குகிறது…..விழாக்கோலம் பூண்ட சேலம் மாவட்டம்!

-

- Advertisement -

 

தி.மு.க. இளைஞரணி மாநாடு இன்று தொடங்குகிறது.....விழாக்கோலம் பூண்ட சேலம் மாவட்டம்!
தி.மு.க. இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஜன.21) நடைபெறுகிறது.

we-r-hiring

நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’…. ரிலீஸ் எப்போது?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக, இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தி.மு.க. இளைஞரணியின் மாநாடு இன்று (ஜன.21) நடைபெறுகிறது. மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, கொடியேற்றி வைக்கிறார். பின்னர், தி.மு.க. இளைஞரணியின் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு தீர்மானங்களை முன்மொழிய உள்ளார். தொடர்ந்து, மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட நிர்வாகிகள் உரையாற்றவிருக்கின்றனர்.

ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’…. ரிலீஸ் எப்போது தெரியுமா?

காலை 11.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை சுமார் 22 தலைப்புகளில் கட்சியின் முன்னணி தலைவர்கள் பேசவிருக்கின்றனர். கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உரையைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றவிருக்கிறார்.

தி.மு.க. மாநாட்டில் கலந்துக் கொள்ள 5 லட்சம் தொண்டர்களுக்கு அசைவ மற்றும் சைவ உணவுகள் வழங்கப்படவுள்ளன. தி.மு.க. மாநாட்டையொட்டி, சேலம்- ஆத்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. மாநாட்டால் சேலம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

MUST READ