தமிழ்நாடு மக்களின் ஆதரவுடனும், ஆசியுடனும் எனது சக்தி யாத்திரை ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னை முதல் கன்னியாகுமரி வரை தொடங்கவுள்ளது என நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜனவரி 27 ஆம் தேதி சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நடைபெறவிருந்த எனது ‘சக்தி யாத்திரை’ ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு மாற்றுகிறேன். இந்த தேதி மாற்றத்திற்கு ஈரோடு இடைத்தேர்தலும் ஒரு காரணம். அரசியல் கட்சியிலிருந்து வெளியே வந்த பிறகு நானும் ஒரு சாமானிய பெண் என்பதால் எனக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன. எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு இல்லை.
எனவே ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவருக்கு எதிராக நீதிக்கு ஓராடும் ஒரு பெண் என்ற முறையில் நான் கவனமாக இருக்க வேண்டும். ஆனாலும் நான் பயப்பட மாட்டேன். ஆகையால் அண்ணாமலை செல்லும் யாத்திரைக்கு எதிராக அதே நாளில் எனது யாத்திரையை நான் தொடங்குவேன். உண்மையும் நீதியும் வெல்லும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
