Homeசெய்திகள்தமிழ்நாடு“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவா?”- கமல்ஹாசன்

“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவா?”- கமல்ஹாசன்

-

- Advertisement -

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த், எம்.எல்.ஏ அசன் மௌலானா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Image

we-r-hiring

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்துக் கொண்டு இருக்கிறோம். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவது குறித்து செயற்குழுவில் விவாதிக்க வேண்டியுள்ளது. கூட்டம் முடிந்த பிறகு, முடிவினை அறிவிக்க கடமைப்பட்டுள்ளோம். செயற்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்த பின் முடிவை அறிவிப்போம். மக்க​ளுக்கு எது நன்மை பயக்கும் என்பதை பற்றி கூட்டத்தில் ஆலோசிப்போம்” எனக் கூறினார்.

முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்ட பின்னர் பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “பாசத்திற்குரிய கமல்ஹாசனை இன்று சந்தித்து, இடைத்தேர்தலில் என்னை ஆதரிக்க வேண்டும் என கேட்டேன். நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக உறுதியளித்தார். கமல்ஹாசனின் ரத்தத்தில் தேசியமும் காங்கிரசும், கலந்திருக்கிறது என எல்லோருக்கும் தெரியும்” என்றார்.

தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், தேர்தல் பணிகளை பிரதான அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன.

 

MUST READ